Thursday 6 September 2012

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவில், கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு டி.ஜி.பி. ராமானுஜம், விழா அமைதியாக நடக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், டி.ஐ.ஜி., ஆய்வாளர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
காவல்துறை தலைவரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவை அமைதியாக நடத்த பொதுமக்களும், ஏற்பாட்டாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More