Thursday 30 August 2012

செலவைக் குறைக்க எத்தனால் கைகொடுக்குமா ?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, இந்தியாவின் மொத்த தேவைக்கான கச்சாவை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கூடுதலாக அன்னிய செலாவணியை களமிறக்க வேண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவையொட்டி, இதற்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கும் மாற்று முயற்சிகள் தற்போது வேகம் பெறத் தொடங்கியுள்ளன.
எத்தனால் கலந்து விற்கும் முயற்சி
இதன் ஒருகட்டமாக, ஏற்கனவே மத்திய அரசு திட்டமிட்ட, பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து விற்கும் முயற்சியை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்க உள்ளன. எத்தனால் என்பது, சர்க்கரை உற்பத்தியின்போது, கிடைக்கும் உப பொருட்களில் ஒன்று. அதாவது, சர்க்கரையைப் பிரித்தபின் கிடைக்கும் மொலாசஸில் இருந்து எத்தனால் எடுக்கப்படுகிறது.
தற்போது மொலாஸஸ், பெரும்பாலும் மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், சர்க்கரை ஆலைகளுக்கு லிட்டருக்கு ரூ. 32 வரை கிடைக்கிறது.

மாறாக, எத்தனாலை, பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யும்போது, காற்று மாசு குறைவதுடன், தூய பெட்ரோலின் தேவை குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் விநியோகிக்க , தமிழக அரசு, ஆறு தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி தந்துள்ளது.
இதையொட்டி, எண்ணெய் நிறுவனங்களும், இப்போது சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனாலை வாங்கிக் கொள்ள ஆர்வ்ம் காட்டியுள்ளன. இந்த எட்டு ஆலைகளும் சேர்ந்து, தற்போது தினசரி 320 கிலோ லிட்டர் எத்தனால் தயாரிக்கும் திறன்கொண்டுள்ளன.

அதிக விலை கொடுக்கும் மதுபான ஆலைகள்
ஒரு லிட்டர் எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முன்பு ரூ.21 விலை கொடுத்தன. ஆனால், மதுபான ஆலைகள் கூடுதல் விலை கொடுக்க முன்வருவதால், அவற்றுக்கு எத்தனால் சப்ளை செய்யவே சர்க்கரை ஆலைகள் விரும்பின.
எனினும், தற்போது, மதுபான ஆலைகளுக்கு போட்டியாக, ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ. 27 அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால், செப்டம்பர் 30ம் தேதி வரை 23,400 கிலோ லிட்டர் எத்தனாலை எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக சர்க்கரை ஆலைகள் சப்ளை செய்யும் என தெரிகிறது.


* News From http://puthiyathalaimurai.tv(30-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More