Monday 6 August 2012

அரசு,உதவி பெறும் பள்ளிகளில் உதவித்தொகை மோசடியை தடுக்க முடிவு

சிவகங்கை:நாமக்கல் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவி தொகையில் ரூ.81 லட்சம் கையாடல் புகாரையடுத்து, சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில், 1,640 அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆதிதிராவிட பிரிவை சேர்ந்த மாணவர்கள் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு கல்வி உதவி தொகையாக ரூ.1850 வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு "கிலி': நாமக்கல்லில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவி தொகையில் 81 லட்ச ரூபாய் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் போல் சிவகங்கை மாவட்டத்திலும் நடந்திருக்குமோ என்ற அச்சம் அப்பிரிவு மாணவ, பெற்றோர்களிடத்தில் எழுந்துள்ளது.

 இதையடுத்து,மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு முறைப்படி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.பெற்றோர்களின் செயல் ஒரு சில தலைமை ஆசிரியர்களிடையே "கிலி'யை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோமளவேணி கூறியதாவது:
நாமக்கல் போன்று புகார் இங்கு வந்ததாக தெரியவில்லை.இருப்பினும், அந்தந்த பகுதி உதவிதொடக்க கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வுக்கு செல்லும் போது, கட்டாயம் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவி தொகை விபரங்களையும், உதவி தொகை முறைப்படி மாணவர்களுக்கு சேர்ந்துள்ளதா என விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன், என்றார்.

*News From http://www.dinamalar.com(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More