Thursday 13 September 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் கைது


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் முரளிதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அணுஉலை முற்றுகை, அடையாள உண்ணாவிரதம், கடல்நீரில் மனித சங்கிலி என கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமாரை, சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட சதீஷ்குமார், அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன், அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த முகிலனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் மூன்று மாதம் சிறையில் இருந்த சதீஷ்குமர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்குமார் மற்றும் தி.மு.க வை சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(14 September 2012 )

Tuesday 11 September 2012

எரிபொருள் நிரப்ப வல்லுநர்கள் வருகை : மின் உற்பத்தி தொடங்குவதில் தீவிரம்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அணு உலையில் எரிபொருள் நிரப்ப வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அணு உலை விரைவில் செயல்பட இருக்கிறது.



இதற்காக அணு உலையில் எரிபொருள் நிரப்ப முதல்கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மத்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர்.

அணு உலையை ஆய்வு செய்யும் இக்குழுவினர், யுரேனியம் நிரப்புவதற்கான இறுதிக்கட்ட அனுமதியை வழங்க இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்குள் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )

Monday 10 September 2012

என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் சூளுரை!


கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், இடிந்தகரையில் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் என போராட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.




தாக்குதலை கண்டித்து போராட்டம் : 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் : 

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு என்ற இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டில்லியிலும் போராட்டம் :

அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்தது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம்  : 

மீனவ மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாலைமறியல் நடைபெற்றது.
நேற்றைய தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைநகரங்களில் 17 அமைப்புகள் சார்பில் இன்று  போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.
*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி


தூத்துக்குடி  மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோனிசாமி பலியானார்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 40 வயதான மீனவர் அந்தோணிசாமி பலியானார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சோதனைச்சாவடியை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி : தலைவர்கள் கருத்து


கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தலைவர் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.




நாராயணசாமி குற்றச்சாட்டு :

கூடங்குளத்தில்,144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் கூடியது சட்ட விரோதமானது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் போராட்டக்காரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பழ.நெடுமாறன் கண்டனம் : 

போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியது கொடுமையானது என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் நியாயமான சந்தேகங்களை போக்க எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையம் தொடர்பாக அரசு சட்டப்படியான குழுவை அமைக்கவில்லை எனவும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

ஞானதேசிகன் கேள்வி :

அணுஉலையை தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பெண்கள் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது எந்தவகையில் நியாயம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை மிரட்டி போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

எந்தப் பிரச்னையையும் வன்முறை மூலமாகவோ, ஒடுக்குமுறை மூலமாகவோ தீர்த்துவிட முடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளிலிருந்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும்வரை அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ:

இந்தியாவில் 21 அணுஉலையிலிருந்து 2.7% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது என்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்திவிட்டு சூரியசக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்:

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




மக்கள் மீதான தாக்குதலுக்கு காவல்துறையே பொறுப்பு – உதயகுமார்


கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக காவல்துறையே பொறுப்பு என அணுஉலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அமைதியாகத்தான் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். முன்னறிவிப்பு இல்லாமல் வன்முறையை எங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டதற்கு காவல்துறைதான் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையினரை நாங்கள் சிறைபிடிக்கவில்லை. எங்கள் மக்கள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை சிறைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. காந்திய வழியில் நாங்கள் அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்கால சந்ததி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் என்றார்.

தமிழக முதல்வர் இதுகுறித்து வாய்திறக்காததான் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக மக்களை எப்படியும் நடத்தலாம் என்பதுதானே இதற்கு காரணம். கூடங்குளம் தவிர மற்ற பகுதிகளில் நடைபெறும் போராட்டம் எங்களைக் கேட்டு நடப்பதல்ல. தமிழக மக்கள் தாங்களாகவே ஆங்காங்கே போராடுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு தமிழக காவல்துறைதான் என்று தெரிவித்தார். மேலும் அவர், தான் இப்போது அந்த ஊரில் இல்லை என்றும் மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கூடங்குளம் போராட்டத்தின்போது இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, மக்கள் உண்பதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவில் மண்ணைப் போட்டு, மக்கள் மீது தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவர்களுக்கு தெரிந்த மொழியில் பேசியிருக்கிறார்கள். காந்தி, இயேசு, புத்தர் காட்டிய வழியில் நாங்கள் போராடுவோம் என்று உதயகுமார் கூறினார். மேலும் சாலை மறியலிலோ அல்லது காவல்துறையினரை தாக்கும் செயலிலோ ஈடுபட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தோழர்கள் மற்றும் ஊர்மக்களோடு பேசி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அணுஉலை எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )


கூடங்குளம் நிலவரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை


கூடங்குளத்தில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலர், காவல்துறைத் தலைவர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதனிடையே கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நியாயம் கோரி போராடுபவர்கள் மீது சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுகிறது மத்திய அரசு என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீசினர். கூடங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. கண்ணீர் புகை குண்டு, தீ வைப்பு சம்பவத்தால் கூடங்குளம் பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாள் போராட்டம் :

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிரான இடிந்தக்கரை மக்களின் போராட்டம் இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. வாட்டும் குளிரில், கடற்கரையில் நேற்று விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலையில், கூடங்குளத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட நெருங்கிய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர் போலீஸார்.

சிறிது நேரம் சகஜ நிலை :

போலீஸார் நடத்திய கண்ணீர் புகை குண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கூடங்குளத்தில் சிறிது நேரம் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து கூடங்குளத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தெரிவித்திருந்தார். மேலும் போராட்டக்காரர்களை கலைக்கவே கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் போராட்டத்தில் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்துவதாக ஜார்ஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் பரவுகிறது :

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்துள்ளது. கூடங்குளம் தடியடி சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பெண் எஸ்.ஐ., உள்பட 4 போலீஸார் சிறைபிடிப்பு :

இதற்ககிடையில் கூடங்குளம் அருகே உள்ள பெரியதாழை சோதனைச் சாவடியில் பெண் எஸ்.ஐ., உட்பட 4 போலீஸார் சிறைபிடிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
உதயகுமார் கேள்வி : அணுஉலைக்கு எதிராக காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறையை தூண்டாத எங்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது சரியா. நிராயுதபாணிகள் மீது தமிழக அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது. எந்தவிதத்திலும் நாங்கள் வன்முறையை தூண்டவில்லை. அணுஉலைக்கோ அங்குள்ள ஊழியர்களுக்கோ நாங்கள் அச்சுறுத்தலாக இல்லை, அப்படியிருக்கும் போது இப்படி எங்கள் மீது தாக்குதலை அவிழ்த்து விட்டிருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார்.    


















கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின்உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அணுஉலையில் எரிபொருள் நிரப்ப சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து, அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி,  குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர்  நேற்று திரண்டனர். ஆனால், காவல்துறை தடுத்ததையடுத்து, கடற்கரையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என அரசு தரப்பின் சமரச முயற்சிகள் எடுபடாமல் போனதையடுத்து, விடிய விடிய கடற்கரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய போராட்டம், ஓராண்டும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், அணுமின் நிலையத்தை  தொடங்குவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து, நடத்திக் கொண்டிருக்கும் சுப.உதயகுமாரை அரசு நிர்வாகமும், காவல்துறையும் குறிவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை முடக்க, அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கூடங்குளத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, கலவரத் தடுப்பு வாகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் எதற்கும் பயப்படாமல் போராட்த்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, கடற்கரையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




Thursday 6 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து – 11 பேர் கைது


சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமுறைவாக உள்ள ஆலை அதிபர் முருகேசனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சிவகாசிக்கு அருகிலுள்ள முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று நண்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 38 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் வெடித்துச் சிதறியதில், ஒட்டுமொத்த தொழிற்சாலையும் இடிந்து தரை மட்டமானது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களில் பலரும் தீ யில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கான உரிமம் ஏற்கனவே ரத்தாகியுள்ளது.. ஆயினும் அதன் உரிமையாளர் முருகேசன் தொடர்ந்து நடத்தியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர, அந்த ஆலையில் 40 வகையான விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. பட்டாசு தயாரிப்பில் சுத்தியல் போன்ற கனமான பொருட்களை பயன்படுத்தியது, அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தது போன்றயே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில்,  அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

puthiyathalaimurai.tv(6 September 2012 )
http://www.makkalsanthai.com/


பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவில், கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு டி.ஜி.பி. ராமானுஜம், விழா அமைதியாக நடக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், டி.ஐ.ஜி., ஆய்வாளர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
காவல்துறை தலைவரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவை அமைதியாக நடத்த பொதுமக்களும், ஏற்பாட்டாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

Thursday 30 August 2012

செலவைக் குறைக்க எத்தனால் கைகொடுக்குமா ?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, இந்தியாவின் மொத்த தேவைக்கான கச்சாவை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கூடுதலாக அன்னிய செலாவணியை களமிறக்க வேண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவையொட்டி, இதற்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கும் மாற்று முயற்சிகள் தற்போது வேகம் பெறத் தொடங்கியுள்ளன.
எத்தனால் கலந்து விற்கும் முயற்சி
இதன் ஒருகட்டமாக, ஏற்கனவே மத்திய அரசு திட்டமிட்ட, பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து விற்கும் முயற்சியை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்க உள்ளன. எத்தனால் என்பது, சர்க்கரை உற்பத்தியின்போது, கிடைக்கும் உப பொருட்களில் ஒன்று. அதாவது, சர்க்கரையைப் பிரித்தபின் கிடைக்கும் மொலாசஸில் இருந்து எத்தனால் எடுக்கப்படுகிறது.
தற்போது மொலாஸஸ், பெரும்பாலும் மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், சர்க்கரை ஆலைகளுக்கு லிட்டருக்கு ரூ. 32 வரை கிடைக்கிறது.

மாறாக, எத்தனாலை, பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யும்போது, காற்று மாசு குறைவதுடன், தூய பெட்ரோலின் தேவை குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் விநியோகிக்க , தமிழக அரசு, ஆறு தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி தந்துள்ளது.
இதையொட்டி, எண்ணெய் நிறுவனங்களும், இப்போது சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனாலை வாங்கிக் கொள்ள ஆர்வ்ம் காட்டியுள்ளன. இந்த எட்டு ஆலைகளும் சேர்ந்து, தற்போது தினசரி 320 கிலோ லிட்டர் எத்தனால் தயாரிக்கும் திறன்கொண்டுள்ளன.

அதிக விலை கொடுக்கும் மதுபான ஆலைகள்
ஒரு லிட்டர் எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முன்பு ரூ.21 விலை கொடுத்தன. ஆனால், மதுபான ஆலைகள் கூடுதல் விலை கொடுக்க முன்வருவதால், அவற்றுக்கு எத்தனால் சப்ளை செய்யவே சர்க்கரை ஆலைகள் விரும்பின.
எனினும், தற்போது, மதுபான ஆலைகளுக்கு போட்டியாக, ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ. 27 அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால், செப்டம்பர் 30ம் தேதி வரை 23,400 கிலோ லிட்டர் எத்தனாலை எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக சர்க்கரை ஆலைகள் சப்ளை செய்யும் என தெரிகிறது.


* News From http://puthiyathalaimurai.tv(30-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Wednesday 29 August 2012

சர்ச்சைக்குள்ளாகும் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் விவகாரம்


டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் முடிவுக்கு வருமுன்னர், தற்போது குரூப்-4 வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்துள்ளது.



குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஷீதர்ராஜின் நண்பரான சதீஸ்குமார் என்பவர் போலீஸாரிடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 22-ம் தேதி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த ஷீதர்ராஜ் அதை தருவதற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக சதீஸ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்ட ஷீதர்ராஜ் ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து சதீஸ்குமாரிடம் குரூப்-4 வினாத்தாளை முன்கூட்டியே கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, ஆந்திராவைச் சேர்ந்த ராவ் என்பவர் மூலம் அந்த வினாத்தாளை தான் வாங்கியதாக ஷீதர் ராஜ் போலீஸாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படை போலீஸார், ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.



* News From http://puthiyathalaimurai.tv(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/



மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு : நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டம்


இந்தியாவில் இலங்கை படையினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, கூறியதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, ஷீரடி சென்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர்கள் மறித்ததால் இந்த ரயில்களின் போக்குவரத்தில் ஒரு மணிநேரம் ஏற்பட்டது.
மேலும், போராட்டத்தின் போது, பல்லம் ராஜூவின் உருவபொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

* News From http://puthiyathalaimurai.tv(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Tuesday 28 August 2012

கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் வெளியேற்றிய 6 தொழிற்சாலைகளை மூட உத்தரவு : வேலூர் ஆட்சியர் நடவடிக்கை


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் வெளியேற்றிய ஆறு தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டது.

பேரணாம்பட்டு பகுதியில் இயங்கிய வஜ்ரம் தயாரிக்கும் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றத்தால் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்கள் வந்தன. கடந்த 6ம் தேதி, மாவட்ட ஆட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் இது தொடர்பாக முறையிட்டனர். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவுப்படி, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பேரணாம்பட்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இதில், ஆறு வஜ்ரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கழிவுநீரை தங்கள் வளாகத்துக்கு உள்ளேயே சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சி செய்யாமல் கழிநீரை வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இந்த ஆறு தொழிற்சாலைகளை மூடவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் இவை போன்று கழிவுநீரை வெளியேற்றி நீர் நிலைகளை மாசுப்படு்த்தும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் எச்சரித்துள்ளார்.

* News From http://puthiyathalaimurai.tv(28-Aug-2012)
http://www.makkalsanthai.com/



இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்


இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என்ற மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜுவின் அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நீலகிரியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இலங்கை வீரர்களை மீண்டும் இலங்கைக்கே திரும்பி அனுப்ப வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவத்தினருக்கு இப்படிப்பட்ட பயிற்சிகள் இனிமேல் அளிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு உறுதியாக கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல்லம் ராஜுவின் அறிவிப்பு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காயப்படுத்துகிறது என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறுவது தவறு என்றும், இந்தியாவை விட இலங்கை சீனாவையே நட்பு நாடாக கருதுகிறது என்றும் கூறியுள்ளார்.


* News From http://puthiyathalaimurai.tv(28-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Wednesday 8 August 2012

சிறிய தானியம் நீண்ட வரலாறு...

சென்னை : எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து, தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் அருங்காட்சியக பிரிவின் சார்பில் தானிய கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு, தமிழகத்தில் விளையும் தானியங்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு தானிய வகையின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து விளக்கம் அளிக்கின்றனர். கண்காட்சி துவங்கிய நாள் முதல் கல்லூரி மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளது.""பீட்ஸாவும் பர்க்கரும் சாப்பிடும் இளைய தலைமுறையினர் பலருக்கும் கேழ்வரகும், சாமையும் தெரிவதில்லை.

 அதனால் தானிய கண்காட்சியில் ஆரம்பம் முதலே இளைய தலைமுறையினரின் வருகை அதிகமாக இருக் கிறது,'' என்கின்றனர், அருங்காட்சியக அதிகாரிகள். தானியங்களையும் அதன் வரலாற்று பின்னணி தகவல்களும் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.அரிசிஅரிசி தவிட்டு எண்ணெய் மருத்துவ குணம் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஒரைசால் மாதவிடாய் நீக்க மருந்தாக பயன்படுகிறது. கூல அரிசியில் உயிர்ச்சத்து ஏ வினை அதிகரிக்க, ஜெர்மன், சுவிஸ் ஆய்வாளர்கள் மரபணு மாற்றம் வழி தங்க அரிசி எனும் பீட்டா கேரோட்டின் அரிசியினை உருவாக்கியுள்ளனர்.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் கோவாவில் பயிரிடப்படுகிறது.

மக்காச்சோளம்வரலாற்று காலத்திற்கு முந்தைய காலந்தொட்டே மக்காசோளம், அமெரிக்க மக்களால் பயிரிடப்பட்டது. இது ஆப்பிரிக்காவில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.வேர்க்கடலைஅவரை குடும்பத்தைச் சார்ந்த வேர்க்கடலை பாராகுவாய் பள்ளத்தாக்கில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. இது நடு தென் அமெரிக்காவிற்கு பூர்வீகமானது.கம்பு கம்பு ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் கம்பு அறிமுகம் செய்யப்பட்டதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நெல் மட்டுமின்றி, சோளம், உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, கொள்ளு, எள், சோளம், மக்கா சோளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி வரை காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இவற்றை பார்வையிடலாம்.

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய "ஹெல்மெட்' :உயிரிழப்பு விபத்தை தவிர்க்க தீவிரம்


கோவை : கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு, இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள், கட்டாயம் "ஹெல்மெட்' அணிய வேண்டுமென, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை, கல்லூரி நிர்வாகத்தினர் கடுமையாக்கியுள்ளனர்.தமிழகத்தில், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம், "ஹெல்மெட்' அணிய வேண்டும், என, உத்தரவிட்டபோது, அனைவரும் "ஹெல்மெட்' வாங்கினர். சில வாரங்களில், "கட்டாயம்' என்பதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டதால், வாகனம் ஓட்டுவோரும் "ஹெல்மெட்' அணிவதை கைவிட்டனர்.விபத்து ஏற்படும்போது, "ஹெல்மெட்' அணியாததால், தலையில் அடிபட்டு, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, கோவையில் கல்லூரி மாணவர்கள், கட்டாயம் "ஹெல்மெட்' அணிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.வேண்டுகோள்கோவையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், "கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்களை அதிக வேகமாகவும், கவனக்குறைவாகவும், கட்டுப்பாடின்றியும் ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. அசம்பாவிதத்தை தவிர்க்க கல்லூரி மாணவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை, கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயமாக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.கமிஷனரின் உத்தரவை கோவையிலுள்ள, தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமல்படுத்தியுள்ளன. கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.இருசக்கர வாகனத்தில், "ஹெல்மெட்' அணிந்து வந்தால்தான், கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற, கட்டாய உத்தரவுகளை பின்பற்றத்துவங்கியுள்ளனர். இன்னும் சில கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயப்படுத்தும் பணி நடந்து வருகிறது."அனைவருக்கும்'கோவையிலுள்ள கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது:இருசக்கர வாகனத்தில் வருவோர், "ஹெல்மெட்' அணிவது பாதுகாப்பானது. போலீஸ் கமிஷனரின் அறிவுறுத்தல் படி, கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் "ஹெல்மெட்' அணிய துவங்கியுள்ளனர்.அதேபோன்று, மாணவர்களும் "ஹெல்மெட்' அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் "ஹெல்மெட்' அணிந்து வந்தால் மட்டுமே, கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என, வாட்ச்மேன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா, வாகனத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம்.இவை இல்லாவிட்டால், பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்து, போக்குவரத்து விதிமுறைகள் பற்றி தெரிவித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.இவ்வாறு, கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

யாருக்காக...உயிரிழப்பு விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவர்களுக்கு கட்டாய "ஹெல்மெட்' விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி, மாணவர்கள் ஹெல்மெட் கொண்டு சென்றாலும், பயணத்தின் போது அணிவதில்லை. தலையில் அணிய வேண்டிய "ஹெல்மெட்டை' வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது, வைத்துக்கொள்கின்றனர். கல்லூரி அருகே சென்றதும், ஹெல்மெட்டை அணிகின்றனர். அதேபோன்று, கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் கழற்றி வைத்து விடுகின்றனர். தலைக்கவசம், உயிர்க்கவசம் என்பதை அறிந்து, "ஹெல்மெட்டை' காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் பயன்படுத்த வேண்டும்.இது போலீசார், கல்லூரி நிர்வாகத்தினர் கவனத்திற்கு வரும்போது, தண்டனை தரப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது, விபத்துகள் குறையும் என்பதை நம்பலாம்.

டெசோ மாநாடு : கருணாநிதி வேண்டுகோள்


டெசோ மாநாடு குறித்த இலங்கை அரசின் தவறான பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், மாநாட்டை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து  கொள்ளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீது அரசு கவனம் செலுத்தும் என்று இலங்கை ஊடகத் துறை அமைச்சர் கூறியிருப்பது கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதைப் புரி்ந்து கொள்ளாமல் பேசுவது கவலையளிப்பதாகவும் அறிக்கையில் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/


டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது நாளை விசாரணை


டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்திருந்தார்.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்துள்ளது.
* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)

நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 750 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சர் உத்தரவு


தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நகர்ப் பகுதிகளில் குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல், பொது சுகாதாரம், மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்திருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 500 கோடி ரூபாய் நகராட்சிகளின் மேம்பாட்டிற்கும், 250 கோடி ரூபாய் பேரூராட்சிகளின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் 15 பேரூராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்ட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/




Tuesday 7 August 2012

நம்புங்கள்; சொல்கிறார், கமிஷனர் பிளாஸ்டிக் தடை முழு செயல்பாட்டுக்கு வரும்!

திருப்பூர் : ""திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டல், பேக்கரி, டீக்கடை, "டாஸ்மாக்' பார்கள் உட்பட அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்காமல், தடை செய்யப்பட்ட மக்காத பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்,'' என மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் உருவாவதாகவும், அவற்றில், 500 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில், தினமும் ஐந்து டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் உள்ளன.

வீடு வீடாக குப்பை சேகரிக்கும்போது, பிளாஸ்டிக் கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள கன்டெய்னர்களில் அனைத்து வகையான குப்பைகளும் சேகரமாகின்றன. குப்பை கொட்டப்படும் பாறைக்குழிகளுக்கு செல்லும் குப்பை சேகரிப்போர், கைக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துச் சென்று எடைக்கு போட்டு சம்பாதிக்கின்றனர்.

"மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன் பாடுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை, சிறுதுகள்களாக மாற்றி, தார் ரோடு அமைக்க பயன்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல்கட்டமாக, நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள மாட்டுக்கொட்டகை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை துகள்களாக மாற்றும் "ஸ்ரெட்டர்' மெஷின் வைக்கப்பட்டது.

பாலித்தீன் கழிவுகளை "ஸ்ரெட்டர்' மூலமாக துகள்களாக மாற்றி, 29 லட்சம் ரூபாய் அளவில், 10 இடங்களில் பிளாஸ்டிக் ரோடு அமைக்கப்பட்டது. "ஸ்ரெட்டர்' மெஷின் பலமுறை பழுதாகியதால், பெயரளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் ரோடு அமைக்கப்பட்டது. மாநகராட்சியில் சேகரமாகும் ஐந்து டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளையும் துகள்களாகி, இருப்பு வைத்துக் கொண்டால், அவ்வப்போது பிளாஸ்டிக் ரோடு அமைக்க ஏதுவாக இருக்கும்; குப்பை பிரச்னையும் தீரும்.

எனவே, மண்டலம்தோறும் கிடங்குகள் அமைத்து, "ஸ்ரெட்டர்' மெஷின்கள் மூலமாக பிளாஸ்டிக் துகள்களாக மாற்றி, கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீரழிவு தடுக்கப்படும். கமிஷனர் செல்வராஜிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: குப்பை அள்ளும் பணி வேகமாக நடந்தாலும், சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நகரம் மாசடைந்த தோற்றத்தில் தெரிகிறது. குப்பை அள்ளும் வாகனங்களில் வலை கட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் மூலமாக, பரவியுள்ள பாலித்தீன் காகிதங்களை பொறுக்கி எடுத்து, அழிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகப்படியான குப்பை குவிவதால், இரண்டு "ஸ்ரெட்டர்' மெஷின்கள் போதுமானதாக இல்லை; அடிக்கடி பழுதாகின்றன. எனவே, கூடுதல் மெஷின்கள் வாங்கி, மண்டலம் வாரியாக இயக்கப்படும். இருப்பினும், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ஓரிரு வார்டுகளில் மட்டும் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும். ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், "டாஸ்மாக்' பார்கள் உட்பட அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். இனி, அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்காமல், தடை செய்யப்பட்ட மக்காத பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் சுகாதார நிலைக்குழு கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது, என்றார்.

*News From http://www.dinamalar.com(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/



சட்டவிரோத கிரானைட் குவாரி: துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டத்தில், சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் அரசுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, அங்கு ஆட்சியராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதனையடுத்து மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரிகளில் ஆய்வு தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் கடந்த வாரம் தொடங்கியது. மதுரையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சட்டவிரோத கிரானைட் குவாரிகளில் ஆய்வு தொடங்கியது.


துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு :
            இவ்விவகாரத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதும், அவரின் பங்குதாரர் நாகராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துரை தயாநிதி மற்றும் நாகராஜ் இருவரும் ஒலிம்பஸ் என்கிற கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம், அரசு நிலத்தில் உள்ள  கிரானைட் குவாரிகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்துள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கு இடையூறாக இருப்பதுடன், அவர்களது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறி, ரங்கசாமிபுரத்தில் உள்ள சிந்து கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்துள்ளனர்.மேலும் பி.ஆர்.பி கிரானைட் நிறுவன உரிமையாளர் மீது, சட்டவிரோதமாக பொது இடத்தை ஆக்கிரமித்தல், ஆதாரங்களை அழித்தல், பொதுச் சொத்தைத் திருடுதல், அரசு சொத்துக்களைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் இன்றும் ஆய்வு :
               மதுரையைப் போல அளவுக்கு அதிகமாக கிரனைட்கள் வெட்டி எடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்றும் இந்த ஆய்வு தொடர்கிறது. இதன் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு அதிநவீன கருவிகள் பயன்பாடு :
                 மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள அதிநீவன கருவிகள் பயன்டுத்தப்பட்டு வருகின்றன. கிரனைட் குவாரிகளின் எல்லைகளை வரையறுக்க நடப்பட்ட எல்லைக் கற்கள் பல இடங்களில் காணவில்லை. இதனால் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் டோட்டல் ஸ்டேஷன் எனப்படும் நவீன கருவி வரவழைக்கப்பட்டு நேற்று பயன்படுத்தப்பட்டது.கீழ வளைவில் உள்ள சோலைராஜன் குவாரியில் இந்த கருவியைப் பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நவீன கருவியின் மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இடத்தை துல்லியமாக அளக்க முடியம் என்று புவியியல் சுரங்கத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

என்றாலும் பள்ளத்தில் மணல் கொட்டி நிரப்பியதை கண்டறிய இயலாது என்று அவர் தெரிவித்தார்.
பல இடங்களில் அளவுக்கு அதிகமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்துவிட்டு, மண்ணைக் கொட்டி மூடிவைத்துள்ளனர். இவற்றை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/



வழக்கு பற்றி பயமில்லை : விஜயகாந்த்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன் மீது தொடர்ந்துள்ள வழக்கு பற்றி துளி பயமும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்ககோட்டையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தி்ல் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் மீது 4 ஆண்டுகள் கழித்து தான் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது என்றும், ஆனால் இந்த ஆட்சி மீது ஓராண்டிலேயே மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மணல் கொள்ளை தாரளமாக நடைபெறுவதாக புகார் கூறிய அவர், மதுரையில் கிரானைட் குவாரி மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.


* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/



நீலகிரி மலை ரயில் நவீனமயமாக்கம்




சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக அவ்வப்போது ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பயணிகள் சிரமமின்றி சென்று வரும் வகையில் 4 பெட்டிகளுடன் இருந்த மலை ரயில் 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலை ரயிலின் பெட்டிகளை புனரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மலை ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டும், ஒரு பொதுப் பெட்டியும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

ரயிலின் இருக்கைகளும் மாற்றப்பட்டு, கண்ணாடியுடன் கூடிய ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குன்னூர் ரயில்வே பணிமனையில் உள்ள இந்த மலை ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/



திண்டுக்கல்லில் மயில்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை விசாரணை


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரியம்மாள்பட்டி கிராமத்தில் மயில்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



காவிரியம்மாள்பட்டி கிராமம் அருகேயுள்ள அணைக்காடு பகுதியில் விளைநிலங்களில் விளையும் கம்பு,சோளம் போன்ற பயிர்களை அப்பகுதியில் உள்ள மயில்கள் நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் மயில்களின் தொல்லையை சமாளிக்க சிலர், குருணை விஷத்தை தானியங்களில் கலந்து நிலங்களில் வைத்ததாகக் கூறப்படுகிறது இந்த விஷம் கலந்த தானியங்களை உண்டு கடந்த சில நாட்களில் மட்டும் 9 மயில்கள் உயிரிழந்துள்ளன.

தேசிய பறவையான மயில்களை கொல்வது சட்டப்படி தவறு என்பதால், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Monday 6 August 2012

அரசு,உதவி பெறும் பள்ளிகளில் உதவித்தொகை மோசடியை தடுக்க முடிவு

சிவகங்கை:நாமக்கல் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவி தொகையில் ரூ.81 லட்சம் கையாடல் புகாரையடுத்து, சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில், 1,640 அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆதிதிராவிட பிரிவை சேர்ந்த மாணவர்கள் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு கல்வி உதவி தொகையாக ரூ.1850 வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு "கிலி': நாமக்கல்லில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவி தொகையில் 81 லட்ச ரூபாய் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் போல் சிவகங்கை மாவட்டத்திலும் நடந்திருக்குமோ என்ற அச்சம் அப்பிரிவு மாணவ, பெற்றோர்களிடத்தில் எழுந்துள்ளது.

 இதையடுத்து,மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு முறைப்படி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.பெற்றோர்களின் செயல் ஒரு சில தலைமை ஆசிரியர்களிடையே "கிலி'யை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோமளவேணி கூறியதாவது:
நாமக்கல் போன்று புகார் இங்கு வந்ததாக தெரியவில்லை.இருப்பினும், அந்தந்த பகுதி உதவிதொடக்க கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வுக்கு செல்லும் போது, கட்டாயம் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவி தொகை விபரங்களையும், உதவி தொகை முறைப்படி மாணவர்களுக்கு சேர்ந்துள்ளதா என விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன், என்றார்.

*News From http://www.dinamalar.com(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/



அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை, ஆரம்ப நிலையிலேயே சரி செய்வதில்லை


சென்னை கோயம்பேட்டில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து, தமிழகத்தின் அநேக பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு இரண்டு பணிமனைகள், விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய
மண்டலங்களுக்கு, நான்கு பணிமனைகள் என, மொத்தம் ஆறு பணிமனைகள் செயல்படுகின்றன.

"லாக் சீட்'க்கு முழுக்கு
பயணம் மேற்கொண்டு விட்டு, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தை வந்தடையும் பஸ்களில் உள்ள பழுது மற்றும் குறைபாடுகளை, பஸ் ஓட்டுனர்கள் "லாக் சீட்' என்கிற நோட்டு புத்தகத்தில் எழுதி வைப்பது வழக்கம். குறிப்பாக பஸ்சில் டீசல் சிந்துவது, பக்கவாட்டு கண்ணாடி சரியில்லாதது, பிரேக் நிலை, மேற்கூரை பழுதால் தண்ணீர் சிந்துவது, இன்ஜினில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட குறைகளை எழுதி வைப்பர்.

அதன் அடிப்படையில், பழுதுகளை, சரி பார்ப்பது வழக்கம். சரி பார்த்த பின்னரே, அடுத்த பயணத்திற்கு, அந்த பேருந்தை அனுப்ப வேண்டும். ஆனால், இந்த முறையை, முறையாக பின்பற்றுவதில்லை.
விடிய, விடிய சொதப்பல்
இரவு நேரத்தில் பணிமனைகளுக்கு அதிகளவில் பஸ்கள் வந்தடைகின்றன. மறுநாள் காலை பயணத்துக்கு தயாராக, பழுதுகளை இரவு நேரத்திலேயே சரி பார்க்க வேண்டும். ஆனால், இரவு நேரத்தில் பழுதுகள் நீக்கும் பணி முறையாக நடைபெறுவதில்லை, என்று கூறப்படுகிறது.

கோயம்பேடு பணிமனைகளில், இரவு நேரத்தில் எந்த பணியும் நடைபெறாமல், ஒவ்வொரு நாளும் விடியும் போதும், பெரும்பாலான பஸ்கள் பழுதுடனேயே நிற்கின்றன. இந்த பஸ்களை வெவ்வேறு வழித்
தடத்தில், மாற்று பேருந்தாக இயக்கி சமாளிக்கின்றனர்.
அலட்சியமே விபத்து
இப்படி ஆரம்பக்கட்டத்திலே, சிறிய அளவிலான பழுதுகளை சரி செய்யாமல் இயக்குவதால், அரசு பஸ்கள் பெரும்பாலனவை விபத்தில் சிக்கவும், சில ஆண்டுகளிலே, குப்பைக்கு செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறது.
மாதந்தோறும் பராமரிப்பு என்ற அடிப்படையில், பஸ்களின் நான்கு டயர்களும் கழற்றப்பட்டு, அவற்றில் பிரேக் நிலைமை, டயர் மற்றும் டியூப் நிலை, பியரிங் நிலை ஆகியவவை சரி பார்க்கப்பட்டு, தேவையான கிரீஸ் வைக்கப்பட்டு, மீண்டும் டயர்களை பொருத்துவது வழக்கம். இந்த பராமரிப்பை அனைத்து பஸ்களிலும், மாதந்தோறும் முறையாக செய்வதில்லை.

கை கழுவும் நிர்வாகம்
விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கூறியதாவது:
மாதத்தில், 10 நாட்கள் கூட ஒரே பஸ்சை இயக்க முடிவதில்லை. குறிப்பிட்ட பஸ் பழுது பார்க்கும் நிலையில் உள்ளது, எனக் காரணம் கூறும் நிர்வாகத்தினர், மாற்று பஸ்சை வழங்குகின்றனர். அந்த பஸ்சின் பராமரிப்பானது, வழக்கமான பஸ்சை காட்டிலும் படுமோசமான நிலையில் உள்ளது. வழக்கம்போல், ஆட்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் இல்லை, என்ற காரணத்தை கூறியே, பஸ்களில், பழுது பார்க்கும் பணியை நிர்வாகத்தினர் கை கழுவுகின்றனர்.
இவ்வாறு ஓட்டுனர்கள் கூறினர்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, 100க்கும் குறைவான தொழிலாளர்களே, பணியில் உள்ளனர். விரைவில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பராமரிப்பு பணியை சிறப்பாக மேற்கொள்வோம்,' என்றார்.
*News From http://www.dinamalar.com(06-Aug-2012)

கிருஷ்ணகிரியில் கிரானைட் குவாரிகளில் ஆய்வு


கிருஷ்ணகிரியில் சட்டவிரோதமாக இயங்குவதாக புகாரில் சிக்கியுள்ள கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடந்து வருகிறது. மதுரையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரணைட் குவரிகளில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக  கற்கள் வெட்டி எடுப்பதாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் இருக்கும் 100,க்கும் மேற்பட்ட குவாரிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் மதுரையில் செயல்படும் சட்டவிரோத கிரனைட் குவாரிகள் தொடர்பாக 5வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

* News From http://puthiyathalaimurai.tv(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/


முதல்வர் அலுவலக உத்தரவுகள் கிடப்பில் :மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்


விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகார் மனுக்களை, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரமைப்பு சட்டப்படி, விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டிய பொறுப்பு சி.எம்.டி.ஏ., வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதில் குறிப்பிட்ட அளவு அதிகாரங்களை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த பகிர்வுக்கு மேலும், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளது. ஆனால், தங்களுக்கு வரும் புகார்களை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்புவதை மட்டுமே சி.எம்.டி.ஏ., செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன. இந்த புகாரை உறுதிப்படுத்தும் விதமாக, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சமீபத்திய செயல்பாடு அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு...
பல புகார்களில் ஒன்றாக, சென்னை முகப்பேர், கோல்டன் காலனி பகுதியில் மனை எண், 1,280ல், அனுமதி இன்றி, நகரமைப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக கூடுதல் தளங்கள் கட்டப்படுவதாக, சி.எம்.டி.ஏ., வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஏன் இடிக்கக்கூடாது என, "நோட்டீஸ்' மட்டும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இதற்கு மேல், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, கடந்த பிப்ரவரியில் புகார் மனு அனுப்பியிருந்தனர்.
அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல் கட்டடம் தொடர்பாக, இடிப்பு நடவ டிக்கை எடுக்குமாறு, முதல்வரின் தனிப் பிரிவின் சிறப்பு அலுவலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால், இந்த கட்டடம் மாநகராட்சியின் அதிகார வரம்புக்குள் வருவதாகக் கூறி, ""1919ம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் சட்டப்படி, சம்பந் தப்பட்ட கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பியது.
கிடப்பில்...
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த இந்த கடிதம் மட்டுமல்லாது, விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக
வந்த ஏராளமான புகார்
கடிதங்கள், மாநகராட்சிக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன.
ஆனால், அவற்றின் மீது மாநகராட்சி கமிஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆள் பற்றாக்குறை
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக வரும் புகார்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
போதிய எண்ணிக்கையில் இதற்கான பணியாளர்கள் இல்லாதது, இருக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை போன்ற காரணங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சி.எம்.டி.ஏ., அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் அலுவலக அறிவுறுத்தலுடன் வந்த புகார் மனுக்களுக்கே இந்த நிலை என்றால், மற்ற புகார்கள் மீது என்ன நடவடிக்கை இருக்கும் என்பது தான், இப்போது எழுந்துள்ள கேள்வி.


*News From http://www.dinamalar.com(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/





Sunday 5 August 2012

மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை வருமா?


""உணவு பொருட்களில் நிக்கோடின் இருப்பதை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது.
இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். இவை, புற்றுநோயை கன்னம், நுரையீரல் மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பை போன்றவற் றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த பாதிப்பை தடுக்கும் வகையில் கோபா எனப்படும் புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் 2003ன் படி
சிகரெட் உட்பட மெல்லும் புகையிலை பொருட்கள் மீது பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டன. ஆனால், இக்கட்டுபாடு இருந்தும் மத்திய அரசு முறையாக நடைமுறைபடுத்தவில்லை.
கடந்த 2008ல் மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைபடுத்தியது. இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் மீது அபாய குறியீடு பொறிக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
தடை
இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(ஒழுங்கு முறைகள்) 2011 சட்டத்தின் 2,3,4, பிரிவின் படி உணவு பொருட்களில் நிக்கோடின் புகையிலை இருக்க கூடாது. இந்த, சட்டத்தின் அடிப்படையில் குட்கா, பான்பராக், ஹான்ஸ், ஜர்தா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களை கேரளா, பீஹார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடை செய்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
புற்றுநோய் பாதிப்பை தடுக்கலாம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் சமீபகாலமாக இந்தியா முழுவதும் 42 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் நிக்கோடின் கலந்த மெல்லும் புகையிலை பொருட்களால் ஏற்படும் வாய் புற்றுநோய் தவிர்க்க அவற்றை விற்க தடை செய்துள்ளது வரவேற்கதக்கது. இதே போல தமிழகத்திலும் தடை செய்யும் பட்சத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
http://www.makkalsanthai.com/

புழல் சிறையில் தொடரும் தற்கொலைகள்


புழல் சிறையில் கைதிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலையில் நீடிக்கும் மர்மம்


புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள கைதி சதீஷ் லுங்கியில் தன்னுடைய அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சதீஷ் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் போலீசார் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைத்தனர். அவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரின் மனைவி ராகிணி குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்வாணப்படுத்தி தாக்கியதாகக் குற்றச்சாட்டு


புழல் சிறையில் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிப்பதாக இறந்து போன சதீஷின் நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவரும், குற்ற வழக்குகள் தொடர்பாக புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


மனித உரிமை மீறல்களும், கைதிகளுக்கு பல கொடுமைகளும் புழல் சிறையில் நடக்கிறது என்று சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி புழல் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். கைதிகளின் தற்கொலையை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருவதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். மன உளைச்சல் உள்ள கைதிகளுக்கு தனியாக கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கைதிகளை தனி அறையில் வைத்து கவுன்சலிங் கொடுக்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv
http://www.makkalsanthai.com/



ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்


திண்டுக்கல் மாவட்டம் லந்தகோட்டை கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் சாமிநாதன் குடிநீர் பிரச்னைக்காக ஊராட்சி மன்ற தலைவர் மோகனை சந்தித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 4 பேர் சாமிநாதனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக தெரிகிறது.
மேலும் சாமிநாதன் மீது காவல் துறையினர் கொலை வழக்கு பதிவுசெய்ததாகவும் கூறப்படுகிறது. பொய் வழக்கு போடப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மோகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பாலபாரதி என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
* News From http://puthiyathalaimurai.tv

Friday 3 August 2012

சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளில் 2வது நாளாக சோதனை


மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் இயங்கும் சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் தமிழக அரசுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக, மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த சகாயம் அரசுக்கு அளித்த ஆய்வறிக்கையில் தெரிவிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இது  குறித்து மதுரை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அளித்த பேட்டியில் : மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் கூறியிருந்தார். முறைகேடுகள் தொடர்பாக குழுக்கள் அமைத்து விசாரித்து வருவதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று மதுரையில் 175 கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
* News From http://puthiyathalaimurai.tv


ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி



நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில், 77 பள்ளி தலைமை ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிரடி யாக, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 1,002 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த, ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும், 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆதி திராவிட பிரிவில் சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
போலி கையெழுத்து: அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 2010 - 2011 மற்றும் 2011 - 2012ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை அரசிடம் இருந்து, ஆதி திராவிடர் நலத்துறையினர் பெற்றுள்ளனர். அத்தொகை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் காசோலையாக வழங்கப்பட்டது. அந்த காசோலையை வங்கி மூலம் பணமாக மாற்றி, மேற்குறிப்பிட்ட ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்வி உதவித் தொகை, ஆதி திராவிட மாணவர்களுக்கு முழுமை யாகச் சென்றடையவில்லை. போலிக் கையெழுத்து போட்டு அத்தொகை, 81 லட்சம் ரூபாய் முழுவதையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், "ஸ்வாகா' செய்துள்ளனர். அதற்கு புரோக்கர்கள் சிலர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பாலமாகச் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை: அந்த குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தும்படி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி

தேவிக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, முதல் கட்ட நடவடிக்கையாக, புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன், மோகனூர் பேட்டப்பாளையம் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி உட்பட மொத்தம் நான்கு பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதில், புதுச்சத்திரம் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இம்மோசடி தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சென்ற வாரம் விசாரணை நடத்தினர். அந்த அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா உத்தரவுப்படி, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள்: இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த


சுகாதாரமற்ற தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளான, 1,016 மாணவ, மாணவியர் மட்டுமே, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால், நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையினர், 2,774 மாணவ, மாணவியர் என, கணக்கு காண்பித்து, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையில் மாவட்ட அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என, மூவர் மட்டும் பணிபுரிகின்றனர். கல்வி உதவித் தொகை கையாடலுக்கு உடந்தையாக இருந்த, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக, 77 பள்ளி தலைமையாசிரியர்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குமரகுருபரன் கூறினார்.
புகார் செய்தால் கைது: எஸ்.பி.,: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பரிந்துரைத்துள்ளார். அதையடுத்து, மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள் உத்தரவுப்படி, உதவித் தொகை வழங்கியது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், ""சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசில் புகார் செய்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்தார்.
*News From http://www.dinamalar.com

"சூரிய ஒளி விலகல்' நிகழ்வை கண்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மக்கள் வியப்பு


கோவை: ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த, "சூரிய ஒளி விலகல்' வானியல் நிகழ்வு, மக்களிடம் ஆச்சரியம், பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை, 11.00 மணிக்கு, சூரியனைச் சுற்றி, பெரிய ஒளி வட்டம் காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்திய நிலையில், இந்த நிகழ்வு, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. "பெரும் புயல்' வரக்கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு வதந்திகளும், கருத்துக்களும் இந்த நிகழ்வை ஒட்டி பரவின. குறிப்பாக, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் இந்த நிகழ்வு பற்றிய தகவல் பரவியது. காலை, 11.00 மணிக்கு துவங்கி, மதியம், 2.30 மணி வரை காணப்பட்ட இந்த வானியல் நிகழ்வு, மழைப் பொழிவு தள்ளிப் போவதற்கான முன்னோட்டம் என்கின்றனர், அறிவியல் அறிஞர்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் லெனின் பாரதி கூறியதாவது: நேற்று சூரியனைச் சுற்றி காணப்பட்ட ஒளிவட்ட நிகழ்வுக்கு, சூரிய ஒளி விலகல் அல்லது ஒளி வட்டம் (சன் ஹாலோ) எனப் பெயர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள பிரதேசங்களில் மட்டும், இந்த ஒளி வட்டம் நேற்று தெரிந்துள்ளது. சாதாரண கண்களில், 22 டிகிரி கோணத்தில் இந்த ஒளிவட்டம் தெரியும். மேகக் கூட்டங்கள், அதிக உயரத்திற்குச் செல்லும் போது, இந்த நிகழ்வு நடக்கும். நேற்று, 8,000 அடி உயரத்திற்கு மேகக் கூட்டங்கள் சென்றதுடன், ஈரப்பதம், பனித்துகள்கள் மற்றும் தூசுகள், சூரியக் கதிர்களில் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த வானியல் நிகழ்வு நடந்துள்ளது.

மேகக் கூட்டங்கள் அடர்த்தியாக இல்லாமல் பரவலாவது, இந்த நிகழ்விற்கு முக்கிய காரணம். இரண்டு வாரங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம் சென்னிமலை பகுதியில் இந்த நிகழ்வு மக்களுக்கு தெரிந்தது. வானவில் நிகழ்வு கோட்பாடு அடிப்படையிலேயே, இந்த நிகழ்வும் நடக்கிறது. நேற்றைய ஒளி வட்டத்தில் சிவப்பு நிறம் உட்புறத்திலும், வெளிப்பக்கம் நீல நிறத்திலும் காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் பரவலாகியுள்ளதால், மழைப் பொழிவு காலதாமதம் ஆவதை இது காண்பிக்கிறது. இவ்வாறு லெனின் பாரதி தெரிவித்தார்.

தென்மண்டல அறிவியல் மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: சூரியனுக்கும், பூமிக்கும் இடையே, 15 கோடி கி.மீ., தூரம் உள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, வளி மண்டலத்தில் உள்ள சின்னச் சின்ன நீர் திவலைகள், சூரியனை விட்டு விலகும். அப்போது, நீர் திவலைகள், முப்பரிமாண கண்ணாடி போல் செயல்பட்டு, சூரியனிலிருந்து வெளிவரும் ஒளியை பிரதிபலிப்பதால், சூரியனைச் சுற்றி இத்தகைய வட்டம் காட்சி அளிக்கும். "சன் ஹாலோ' என்று இதை அழைப்பர். நமது வளி மண்டலத்தில் இத்தகைய நிகழ்வு அடிக்கடி நிகழும். இதனால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு தான். இவ்வாறு அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
*News From http://www.dinamalar.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More