Tuesday 28 August 2012

கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் வெளியேற்றிய 6 தொழிற்சாலைகளை மூட உத்தரவு : வேலூர் ஆட்சியர் நடவடிக்கை


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் வெளியேற்றிய ஆறு தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டது.

பேரணாம்பட்டு பகுதியில் இயங்கிய வஜ்ரம் தயாரிக்கும் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றத்தால் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்கள் வந்தன. கடந்த 6ம் தேதி, மாவட்ட ஆட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் இது தொடர்பாக முறையிட்டனர். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவுப்படி, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பேரணாம்பட்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இதில், ஆறு வஜ்ரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கழிவுநீரை தங்கள் வளாகத்துக்கு உள்ளேயே சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சி செய்யாமல் கழிநீரை வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இந்த ஆறு தொழிற்சாலைகளை மூடவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் இவை போன்று கழிவுநீரை வெளியேற்றி நீர் நிலைகளை மாசுப்படு்த்தும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் எச்சரித்துள்ளார்.

* News From http://puthiyathalaimurai.tv(28-Aug-2012)
http://www.makkalsanthai.com/



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More