டெசோ மாநாடு குறித்த இலங்கை அரசின் தவறான பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீது அரசு கவனம் செலுத்தும் என்று இலங்கை ஊடகத் துறை அமைச்சர் கூறியிருப்பது கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதைப் புரி்ந்து கொள்ளாமல் பேசுவது கவலையளிப்பதாகவும் அறிக்கையில் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment