Wednesday 8 August 2012

சிறிய தானியம் நீண்ட வரலாறு...

சென்னை : எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து, தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் அருங்காட்சியக பிரிவின் சார்பில் தானிய கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு, தமிழகத்தில் விளையும் தானியங்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு தானிய வகையின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து விளக்கம் அளிக்கின்றனர். கண்காட்சி துவங்கிய நாள் முதல் கல்லூரி மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளது.""பீட்ஸாவும் பர்க்கரும் சாப்பிடும் இளைய தலைமுறையினர் பலருக்கும் கேழ்வரகும், சாமையும் தெரிவதில்லை.

 அதனால் தானிய கண்காட்சியில் ஆரம்பம் முதலே இளைய தலைமுறையினரின் வருகை அதிகமாக இருக் கிறது,'' என்கின்றனர், அருங்காட்சியக அதிகாரிகள். தானியங்களையும் அதன் வரலாற்று பின்னணி தகவல்களும் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.அரிசிஅரிசி தவிட்டு எண்ணெய் மருத்துவ குணம் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஒரைசால் மாதவிடாய் நீக்க மருந்தாக பயன்படுகிறது. கூல அரிசியில் உயிர்ச்சத்து ஏ வினை அதிகரிக்க, ஜெர்மன், சுவிஸ் ஆய்வாளர்கள் மரபணு மாற்றம் வழி தங்க அரிசி எனும் பீட்டா கேரோட்டின் அரிசியினை உருவாக்கியுள்ளனர்.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் கோவாவில் பயிரிடப்படுகிறது.

மக்காச்சோளம்வரலாற்று காலத்திற்கு முந்தைய காலந்தொட்டே மக்காசோளம், அமெரிக்க மக்களால் பயிரிடப்பட்டது. இது ஆப்பிரிக்காவில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.வேர்க்கடலைஅவரை குடும்பத்தைச் சார்ந்த வேர்க்கடலை பாராகுவாய் பள்ளத்தாக்கில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. இது நடு தென் அமெரிக்காவிற்கு பூர்வீகமானது.கம்பு கம்பு ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் கம்பு அறிமுகம் செய்யப்பட்டதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நெல் மட்டுமின்றி, சோளம், உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, கொள்ளு, எள், சோளம், மக்கா சோளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி வரை காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இவற்றை பார்வையிடலாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More