Tuesday 7 August 2012

சட்டவிரோத கிரானைட் குவாரி: துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டத்தில், சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் அரசுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, அங்கு ஆட்சியராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதனையடுத்து மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரிகளில் ஆய்வு தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் கடந்த வாரம் தொடங்கியது. மதுரையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சட்டவிரோத கிரானைட் குவாரிகளில் ஆய்வு தொடங்கியது.


துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு :
            இவ்விவகாரத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதும், அவரின் பங்குதாரர் நாகராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துரை தயாநிதி மற்றும் நாகராஜ் இருவரும் ஒலிம்பஸ் என்கிற கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம், அரசு நிலத்தில் உள்ள  கிரானைட் குவாரிகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்துள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கு இடையூறாக இருப்பதுடன், அவர்களது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறி, ரங்கசாமிபுரத்தில் உள்ள சிந்து கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்துள்ளனர்.மேலும் பி.ஆர்.பி கிரானைட் நிறுவன உரிமையாளர் மீது, சட்டவிரோதமாக பொது இடத்தை ஆக்கிரமித்தல், ஆதாரங்களை அழித்தல், பொதுச் சொத்தைத் திருடுதல், அரசு சொத்துக்களைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் இன்றும் ஆய்வு :
               மதுரையைப் போல அளவுக்கு அதிகமாக கிரனைட்கள் வெட்டி எடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்றும் இந்த ஆய்வு தொடர்கிறது. இதன் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு அதிநவீன கருவிகள் பயன்பாடு :
                 மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள அதிநீவன கருவிகள் பயன்டுத்தப்பட்டு வருகின்றன. கிரனைட் குவாரிகளின் எல்லைகளை வரையறுக்க நடப்பட்ட எல்லைக் கற்கள் பல இடங்களில் காணவில்லை. இதனால் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் டோட்டல் ஸ்டேஷன் எனப்படும் நவீன கருவி வரவழைக்கப்பட்டு நேற்று பயன்படுத்தப்பட்டது.கீழ வளைவில் உள்ள சோலைராஜன் குவாரியில் இந்த கருவியைப் பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நவீன கருவியின் மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இடத்தை துல்லியமாக அளக்க முடியம் என்று புவியியல் சுரங்கத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

என்றாலும் பள்ளத்தில் மணல் கொட்டி நிரப்பியதை கண்டறிய இயலாது என்று அவர் தெரிவித்தார்.
பல இடங்களில் அளவுக்கு அதிகமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்துவிட்டு, மண்ணைக் கொட்டி மூடிவைத்துள்ளனர். இவற்றை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More