Sunday 5 August 2012

புழல் சிறையில் தொடரும் தற்கொலைகள்


புழல் சிறையில் கைதிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலையில் நீடிக்கும் மர்மம்


புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள கைதி சதீஷ் லுங்கியில் தன்னுடைய அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சதீஷ் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் போலீசார் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைத்தனர். அவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரின் மனைவி ராகிணி குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்வாணப்படுத்தி தாக்கியதாகக் குற்றச்சாட்டு


புழல் சிறையில் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிப்பதாக இறந்து போன சதீஷின் நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவரும், குற்ற வழக்குகள் தொடர்பாக புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


மனித உரிமை மீறல்களும், கைதிகளுக்கு பல கொடுமைகளும் புழல் சிறையில் நடக்கிறது என்று சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி புழல் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். கைதிகளின் தற்கொலையை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருவதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். மன உளைச்சல் உள்ள கைதிகளுக்கு தனியாக கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கைதிகளை தனி அறையில் வைத்து கவுன்சலிங் கொடுக்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv
http://www.makkalsanthai.com/



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More