Wednesday 8 August 2012

நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 750 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சர் உத்தரவு


தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நகர்ப் பகுதிகளில் குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல், பொது சுகாதாரம், மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்திருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 500 கோடி ரூபாய் நகராட்சிகளின் மேம்பாட்டிற்கும், 250 கோடி ரூபாய் பேரூராட்சிகளின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் 15 பேரூராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்ட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More